``பவுலிங் மோசமா இருக்கு; இனிமேலும் பொறுக்க முடியாது..." - பாக். அணி குறித்து வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் அணியின் பவுலிங் மிக மோசமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்திருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியை வாசிம் அக்ரமும் விமர்சித்துப் பேசியிருக்கிறார். "பொறுத்தது போதும். இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே வீரர்களை வைத்துக்கொண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறோம்.

இந்த முறை தைரியமான நடவடிக்கையை எடுத்து இளம் வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். பயமில்லாமல் ஆடும் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 அணியில் தேர்வு செய்யவேண்டும். ஐந்து அல்லது ஆறு வீரர்களை அணியை விட்டு நீக்கவேண்டி இருந்தாலும், அதைப்பற்றி யோசிக்காமல் இந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாம் தோல்விகளை மட்டுமே சந்திக்க நேரிடும்.
ஆனாலும் அந்த இளம் வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும். 2026 டி20 உலக கோப்பைக்கான அணியை இப்போதே கட்டமைக்க வேண்டும். இந்த ஆண்டு அமெரிக்கா, ஓமன் உட்பட 14 அணிகள் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அந்த அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கூட பாகிஸ்தான் அணியின் பவுலிங் மிகவும் மோசமாக இருக்கிறது.

பாகிஸ்தான் அணியில் எந்த அடிப்படையில் அணித் தேர்வுகள் நடந்தன என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs