பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது...
CT 2025: `இந்தியாவுக்கு மட்டும் ஒரே மைதானம்... பெரிய சாதகம்' - பேட் கம்மின்ஸ் கூறுவதென்ன?
பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், அதுவுமே முழுமையாகப் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு வர முடியாது என பி.சி.சி.ஐ தெரிவித்துவிட்டதால், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடத்தப்படுகிறது. குரூப் A-ல் இடம்பெற்றிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், தங்களின் முதல் இரண்டு ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியிக்கு முன்னேறியிருக்கின்றன.

இதனால், இந்தியா ஆடும் அரையிறுதியும், அதில் இந்தியா வெற்றிபெற்றால் இறுதிப்போட்டியும் துபாய் மைதானத்தில்தான் நடைபெறும். பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷுக்கும் ஒரு லீக் மேட்ச் இருந்தாலும், அவர்களால் இனி அரையிறுதிக்கு முன்னேற முடியாது. இந்த நிலையில், ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்திருக்கிறார்.
காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகியிருக்கும் பேட் கம்மின்ஸ், ``சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து நடைபெறுவது நல்லது. அதேசமயம், இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கிறது. ஏற்கெனவே வலுவாக இருக்கும் இந்திய அணி, தங்களின் அனைத்து போட்டிகளை இங்கே விளையாடுவதால் கூடுதல் பலனைப் பெறுகிறது." என்று தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.

இவரைப்போலவே, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் நாசர் ஹுசைன், மைக்கேல் அதர்டன் ஆகியோர், ``மற்ற அணிகளை போல இந்தியா வேறு மைதானங்களுக்கு பயணிக்க வேண்டியதில்லை. மைதானத்தின் தன்மை அவர்களுக்குத் தெரியும். அவர்கள்தான் மைதானத்தைத் தேர்வு செய்கின்றனர்." என்று கூறி, இந்தியாவுக்கு இது சாதகமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இவர்களின் கூற்றுப்படி, ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறதா என்பது பற்றிய உங்களின் கருத்துகளைக் கமெண்ட்டில் பதிவிடுங்கள்.!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
