புணே கார் விபத்து: ஓராண்டாகியும் நீதிக்காக போராடும் குடும்பத்தினர்!
``இனி இந்தியா உடன் மோதல் ஏற்பட்டால்..'' - பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க IMF போட்ட 11 நிபந்தனைகள்
இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிர மோதல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு கிட்டதட்ட 1 பில்லியன் டாலரைக் கடனின் ஒரு பகுதியாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், கடனின் மற்றொரு பகுதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்க பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
அவர்கள் கூறியிருப்பதில் சில...
இந்தியா உடனான பாகிஸ்தானின் உறவு இன்னும் மோசமானாலோ அல்லது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல்போக்கு எதாவது ஏற்பட்டாலோ, நாட்டின் நிதி, வெளியுறவு, சீர்திருத்த இலக்குகளுக்காக கொடுக்கப்படும் இந்தக் கடனின் நோக்கத்திற்கு ஆபத்தாக முடிந்துவிடும்.
ரூ.17.6 டிரில்லியன் புதிய பட்ஜெட்டிற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மின்சார கட்டணங்களில் கடன் சேவைக்கான கூடுதல் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலான பழைய கார்களின் இறக்குமதி தடையை நீக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் படி, அரசு ஒரு செயல் வடிவத்தை உருவாக்க வேண்டும்.
இப்படி நிதி, விவசாயம், எரிசக்தி, அரசியல் நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை அடுக்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள கடனில் ஏற்கெனவே இருந்த நிபந்தனைகளுடன் இப்போது போடப்பட்ட 11 விதிமுறைகளை சேர்க்கும்போது, மொத்தம் 50 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.