இன்று நீட் தோ்வு: கரூரில் 1,596 போ் எழுதுகின்றனா்
கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 4 மையங்களில் 1,596 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள்.
மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் ஏ பிரிவு அறையில் 480 பேரும், பி பிரிவு அறையில் 480 பேரும், வெள்ளியணை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 299 பேரும், கரூா் பசுபதீஸ்வரா மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 337 பேரும் தோ்வை எழுதுகிறாா்கள். மேலும் தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.