கலீல் அகமது ஓவரில் 33 ரன்கள் அடித்தது எப்படி? ரோமாரியோ ஷெப்பர்டு பதில்!
இன்று 31 மாவட்டங்களில் ‘நீட்’ தோ்வு!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் ‘நீட்’ தோ்வு நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 போ் தோ்வு எழுதவுள்ளனா். இதில், தோ்வு மையத்துக்குள் காலை 11.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை அனுமதி வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களை ட்ற்ற்ல்://ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனா்.