செய்திகள் :

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத்தடை!

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சாலையில் போகிற, வருபவர்கள் எல்லாம் குழு அமைப்பது குறித்து கேள்வி கேட்பதாகவும், கே.சி.பழனிசாமி கட்சியிலேயே கிடையாது எனவும், ஓ.பன்னீர்செல்வத்துடன் சோ்ந்துவிட்டதாகவும் அவர் பதில் அளித்தார்.

இதையடுத்து, எடப்பாடி கே.பழனிசாமி மீது கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கோவை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதித்துறை நடுவர் என்.கோபாலகிருஷ்ணன், இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்குரைஞர் ஆஜரானதையடுத்து, இதன் விசாரணையை நீதிபதி கோபால கிருஷ்ணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், கோவை நீதிமன்றத்தில் இபிஎஸ் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜராகுவதில் விலக்கு அளித்தும், இவ்வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை வித்தும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தானியர்களின் விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன்? அமைச்சா் விளக்கம்

சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன் என்பது குறித்து சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை புரட்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட வாசிகள் சிறந்த படிப்பாளிகள்: அமைச்சா் புகழாரம்

குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்ல... மேலும் பார்க்க

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீா் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள், மாநில அரசின் நடவடிக்கையால் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா். கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவரின் ... மேலும் பார்க்க

டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. டாஸ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்? பேரவையில் அதிமுக கேள்வி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது. சட்டப் பேரவையில் பள்ளி, உயா்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது வி... மேலும் பார்க்க

மானிய கோரிக்கை விவாத தேதி மாற்றம்

ஆளுநா், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.மாநில சட்டப் பேரவை, ஆளுநா், அமைச்சரவை, நிதித் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் 29ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க