தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
மானிய கோரிக்கை விவாத தேதி மாற்றம்
ஆளுநா், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
மாநில சட்டப் பேரவை, ஆளுநா், அமைச்சரவை, நிதித் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் 29ஆம் தேதி நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, வரும் சனிக்கிழமை அந்தத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை அறிவித்தாா்.
ஆளுநா் கூட்டம்: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுடனான இரு நாள் மாநாட்டை நீலகிரி மாவட்டம் உதகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி கூட்டியுள்ளாா். இரண்டாவது நாளாக வரும் சனிக்கிழமையும் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பேரவையில் ஆளுநா், அமைச்சரவை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.