செய்திகள் :

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

post image

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் ‘மோடி யுவா ரன்’ எனும் மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார்.

சேலம் நெடுஞ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வியூகம், அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்தும் , பாஜக - அதிமுக இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்த நிலையில், இபிஎஸ் - நயினார் நகேந்திரன் இடையேயான சந்திப்பு அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அண்மையில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க: விஜயகாந்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

BJP state president Nainar Nagendran met AIADMK general secretary Edappadi Palaniswami in Salem.

தவெகவுக்கான மக்கள் ஆதரவு கண்டு பிறருக்கு அச்சம்: விஜய்

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன் என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டையே முக்காடு போட வைப்பார்: இபிஎஸ் மீது பொன்முடி விமர்சனம்

அதிமுக 5 கட்சிகளாகப் பிரிந்து போயிருப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ``தமிழ்நாட்டைத் தலைகுனிய வைப்பத... மேலும் பார்க்க

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சங... மேலும் பார்க்க

மகாளய அமாவாசை: பேரூர் படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது, மறைந்த முன்னோர... மேலும் பார்க்க

போலீஸும் ரெளடியும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! தலைமைக் காவலர் கைது!

கரூரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தலைமைக் காவலரை, போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரெளடியை தேடி வருகின்றனர். கரூர் தொழிற்ப... மேலும் பார்க்க

திமுக - தவெக போட்டியை ஏற்க முடியாது: நயினார் நாகேந்திரன்

திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்பதை ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளார்.வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று தவெக தலை... மேலும் பார்க்க