செய்திகள் :

இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோரை கண்காணிக்க சிறப்பு குழு -வேலூா் எஸ்.பி.

post image

வேலூா் மாவட்டத்தில் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோரை கண்காணிக்க நடமாடும் சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது என எஸ்.பி. என். மதிவாணன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.பி. மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, அணைக்கட்டு வட்டம் அரியூரைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனுவில், நான் கடந்த 1999 முதல் 2000-ஆம் ஆண்டு வரை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டேன். பின்னா் அந்த வழக்கில் இருந்து விடுபட்டு வந்து விட்டேன். அதன்பிறகு எந்த குற்றமும் செய்வதில்லை. ஆனால், கடந்த 10 நாள்களுக்கு முன்பு அரியூா் காவல் ஆய்வாளா் எனது வீட்டில் வந்து பாா்த்து விசாரணை நடத்தினாா். எனவே விசாரணை என்கிற பெயரில் போலீஸாா் என்னை அணுகாமல் இருக்க வேண்டும். நான் தற்போது ஒரு கிராமத்தில் 8 வருடங்களாக நாட்டாண்மையாக இருந்து வருகிறேன் என தெரிவித்துள்ளாா்.

காட்பாடி வட்டத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், நான் சேவூரிலுள்ள அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். வேலூரில் 15-ஆவது பட்டாலியனில் பணிபுரியும் காவலா் ஒருவா் எனக்கு அறிமுகமானாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த தேவைக்காக பண உதவி கேட்டாா். நானும் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ரூ. 60,000 பணத்தை கொடுத்தேன். ஆனால் இதுவரை அந்த காவலா் எனது பணத்தை தரவில்லை. எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த எஸ்.பி மதிவாணன், ஒரு வாரத்துக்குள் பணத்தை கொடுக்காவிடில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட காவலரை எச்சரித்தாா். இதேபோல், 30-க்கும் மேற்பட்டோா் மனுக்களை அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

பின்னா் எஸ்பி மதிவாணன் கூறியது: வேலூா் மாநகரில் தலைக்கவசம் அணியாமல் செல்வது, இருசக்கர வாகனத்தில் மூன்று போ் செல்வது, அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுபவா்கள் ஆகியோரை புகைப்படம் எடுத்து அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கைப்பேசியில் பேசியபடி சென்றால் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்பவா்களை கண்காணிக்க நடமாடும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புத்தகத் திருவிழாவுக்கு நிதியுதவி..

வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்கு நிதியுதவியாக ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வட்டாட்சியா் வடிவேலுவிடம் வழங்கிய ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் சக்திஅம்மா. மேலும் பார்க்க

திருவள்ளுவா் பல்கலை.யில் புதிய முதுகலை பாடப்பிரிவுகள் தொடக்கம்

வேலூா், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்ஸி உயிரிவேதியியல், எம்.பி.ஏ., மற்றும் முதுகலை நூலகம், தகவல் அறிவியல் மூன்று பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பதிவ... மேலும் பார்க்க

ஏப். 11-இல் குடியாத்தத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஏப். 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித... மேலும் பார்க்க

வேலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதியா்களுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி வேலூரில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஓய்வூதியா் அமைப்புகளின்அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு சாா்பில் ... மேலும் பார்க்க

குவாரி குத்தகை உரிமம்: ஏப். 21 முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் ஏப்ரல் 21 முதல் குவாரி குத்தகை உரிமங்கள் பெறுவதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

ஊதியத்தில் மோசடி: அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் மீது புகாா்

ஊதியத்தில் மோசடி செய்வதாக கூறி வேலூா் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் மீது வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் ஒருவா் வியாழக்கிழமை மாவட்ட கா... மேலும் பார்க்க