`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பெருந்துறை பணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (53). இவா், கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் கடந்த 23-ஆம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி மோதியது.
இதில், படுகாயமடைந்த அருணாச்சலத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.