குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன முக்கிய அறிவிப்பு
`நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளேன்’ என முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 22) தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இது குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.
‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், " கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்றார்கள்.
இன்று அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று கூறியிருந்தேன். பலரும் அது என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அறிவிப்பு என்னவென்றால், `தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது. இதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். 5300 ஆண்டுகளுக்கு முன்னாடியே இரும்பின் பயன்பாடு அறிமுகம் ஆகிவிட்டது. அதற்கான ஆய்வு முடிவுகள் நம்மிடம் இருக்கிறது" என்று அறிவித்திருக்கிறார்.