செய்திகள் :

'இரும்பை உருக்கும் மந்திரக் கல்' - வைரலாகும் போலி வீடியோ - பின்னிருக்கும் அறிவியல் உண்மை என்ன?

post image

ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் அரிய கருப்பு நிறக் கல் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த கல் கையில் தொடும்போது சாதாரணமாக குளுமையாக இருந்தாலும் அதில் இரும்பு, எஃகு பொருட்களை வைக்கும்போது உருகுவதாக அந்த வீடியோக்களில் காட்டப்படுகிறது.

எக்ஸ், பேஸ்புக் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் இந்த கல் குறித்த வீடியோக்கள் பரவி வருகின்றன. பலர் இதை நம்பி கமண்ட் செய்திருக்கின்றனர். ஆனால் இது அறிவியல் பூர்மான வீடியோ அல்ல என்பது தெரியவந்துள்ளது.

அந்த வீடியோ எங்கே முதன்முதலாக பகிரப்பட்டது என்பதைத் தேடினால், www.masralyoum.net- ல் அது பற்றிய கட்டுரைக் கிடைக்கிறது. அதில் சௌதி அரேபியாவில் உள்ள ஜெட்டா வானியல் சமூகத்தின் நிறுவனர் எம். மஜித் அபு சஹ்ரா, அந்த கல்லில் வைக்கப்படும் ஆணி போன்ற பொருள் இரும்பால் ஆனது அல்ல என்றும் காலியம் என்ற உலோகத்தால் செய்யப்பட்டது என்றும் விளக்கியுள்ளார்.

காலியம் மிகவும் குறைந்த வெப்பநிலையிலேயே (29 டிகிரி செல்சியஸ்) உருகக் கூடியது. சூடான தரையில் வைத்தாலே உருகிவிடும். இதனால் சூரிய ஒளி தரும் வெப்பமே இதை உருக்கியிருக்கும் என்பதை அறியமுடிகிறது.

இந்த வீடியோ பரவுவது இது முதன்முறை அல்ல, 7 ஆண்டுகளுக்கு முன்பே ஏபிசி செய்திதளம் இதுகுறித்து விளக்கமாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

காலியம் போன்ற உலோகத்தை உருக்க மனித உடலின் சூடே போதுமானதாக இருக்கும். ஆனால் அதன் கொதிநிலையை அடைய அதிகப்படியான வெப்பம் (2400 டிகிரி செல்சியல் வரை) தேவைப்படும்.

அறை வெப்பநிலையில் காலியம் போன்ற பாதரசம், சீசியம் மற்றும் ரூபிடியம் போன்ற உலோகங்களும் உருகிய நிலையிலேயே இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இவற்றை வெப்பமானிகளில் பயன்படுத்துகின்றனர்.

எனவே, இந்த வீடியோ வைரலாக பரவ காரணம் மந்திரக் கல் அல்ல, அதில் வைக்கப்படும் உலோகத்தின் தன்மையே!

"5 லிட்டர் தண்ணீரில் 6 மாதம் அடுப்பு எரியுமா?" - Prof T.V.Venkateswaran Interview

தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவதன் பின்னணியில் இருக... மேலும் பார்க்க

``உலகின் சிறந்த விஞ்ஞானிகள்'' - ஸ்டான்போர்ட் பல்கலை., பட்டியலில் ராமநாதபுரம் உதவிப் பேராசிரியர்!

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை மற்றும் எல்ஸ்வேர் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த தரவரிசைப் பட்டிய... மேலும் பார்க்க

மனிதனால் 150 வயதுக்கு மேல் வாழ முடியுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பது குறித்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், சமீபத்தில் பேசியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.இந்த உரையாடலில் உயிரி தொழில்நு... மேலும் பார்க்க

தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் - ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!

காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்ப... மேலும் பார்க்க

Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்!

காலையில் அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே கண் விழித்து அலாரமை ஆஃப் செய்திருப்போம். இந்த அனுபவம், நம் வாழ்வில் பலமுறை நடந்திருக்கும். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்றோ, அல்லது நமக்கு ஏதோ சூ... மேலும் பார்க்க

மது அருந்துவர்களை கொசு அதிகம் கடிக்குமா? ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்கள்!

மற்றவர்களை காட்டிலும் மது அருந்துபவர்கள் கொசுக்களால் ஈர்க்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பீர் நுகர்வோருக்கும் கொசு கடித்தல... மேலும் பார்க்க