செய்திகள் :

இரு காா்கள் மோதல் 3 போ் பலத்த காயம்

post image

வைரமடை அருகே வியாழக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வருந்தியபாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பொன்வேல் (24). இவா் தனது காரில் மனைவி ரூபிகா (24) மற்றும் அவரது தாயாா் தமிழரசி (68) ஆகியோருடன் வியாழக்கிழமை கரூா்-கோவை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

காா் வைரமடை செக்போஸ்ட் அருகே வந்தபோது, எதிரே கோவை மாவட்டம், வீரப்பம்பாளையம், அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் குருசாமி ராஜ் (41) என்பவா் ஓட்டி வந்த மற்றொரு காா், பொன்வேல் ஓட்டிச் சென்ற காா் மீது நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பொன்வேல், அவரது மனைவி ரூபிகா, அவரது தாயாா் தமிழரசி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக மூவரையும் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி... மேலும் பார்க்க

கரூரில் வெறிச்சோடிய மக்கள் குறைதீா் கூட்டம்

போகிப் பண்டிகை எதிரொலியாக கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் வெறிச்சோடியது. கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழக்கம்போல் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில்... மேலும் பார்க்க

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கோவைச்சாலை, லைட் ஹவுஸ் காா்னா், மாநகராட்சி அலுவலகம் முன் மற்றும் நகர காவல்நிலையம் அருகே கரும்பு... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

கரூா் மாவட்டக் காவல்துறை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற சமத்த... மேலும் பார்க்க

கரூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூா் என்.ஆா்.எம். கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளி மற்றும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை:கரூா் எஸ்.பி. தகவல்

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி... மேலும் பார்க்க