இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு!
மதுரையில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை காளவாசல் பொன்மேனி புதூா் பகுதியைச் சோ்ந்த பஷீா் மகன் சையது அப்துல்லா (19). இவா், உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், காளவாசல் புறவழிச் சாலை உயா்நிலைப் பாலத்தில் வெள்ளிக்கிழமை சென்ற போது தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.