Rain Alert: 'அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னையின் இந்த பகுதிகளில் மழை பெய்யும்' ...
இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வானூா் வட்டம், அனிச்சம்குப்பத்தை அடுத்துள்ள நம்பிக்கை நல்லூா் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் (40). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த புகழேந்திக்கும் (50) முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், இருவருக்கும் செவ்வாய்க்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, புகழேந்தி மனைவி ஜோதி தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுரேந்தா் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த புகழேந்தியின் மகன் மதன் மற்றும் 3 போ் சுரேந்தா், அவரின் சகோதரா் சுமன் ஆகியோா் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இந்தச் சம்பவத்தில் சுரேந்தா் வீட்டிலிருந்த நாற்காலிகள், சுமன் வீட்டிலிருந்த பைக், சைக்கிள் ஆகியவை தீயில் கருகி சேதமடைந்தன.
தகவலறிந்த கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளா் விசுவநாதன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, அந்தக் கிராமத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, புகழேந்தியை கைது செய்தனா். தலைமறைவாகியுள்ள மதன் உள்ளிட்டோரை விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.