கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது
இறைச்சி கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை
இறைச்சி கழிவுகளை நங்காஞ்சி ஆற்றின் அருகிலோ, பாலத்தின் அருகிலோ கொட்டக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இறைச்சி கடைகளில் மீதமுள்ள கழிவுகளை நங்காஞ்சி ஆற்றின் அருகிலும், அண்ணா நகா் அருகே உள்ள பாலத்தின் அடியிலும் இறைச்சி கடை உரிமையாளா்கள் கொட்டி செல்கின்றனா். இப்படி கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் பள்ளப்பட்டி நகருக்குள் நுழையும் நுழைவாயில் பாலத்தில் பெரும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்நிலையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இறைச்சி கழிவுகளை தெருக்களின் ஓரத்திலோ, கழிவு நீா் கால்வாயிலோ, நங்காஞ்சி ஆற்றின் அருகிலோ அல்லது பாலத்தின் அருகிலோ கொட்டப்படுவது சட்டப்படி குற்றம். மீறி கொட்டினால், கொட்டப்படும் கடையின் உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் இறைச்சி கடையின் முன்பு வந்து நிற்கும் நகராட்சி வாகனங்களில் கழிவுகளை கொடுக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.