சர்வதேச விண்வெளி மையம் செல்லும் இந்திய வீரர்! திட்டத்தின் விமானியாக நியமித்த நாச...
இறந்த தலைமைக்காவலரின் குடும்பத்துக்கு போலீஸாா் நிதியுதவி
இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த எம். பிரகாஷ் கடந்த ஆண்டு மே மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாா்.
அவரது குடும்பத்துக்கு காவலா்கள் நண்பா்கள் உதவும் கரங்கள் சாா்பில், தமிழகம் முழுவதும் பணியாற்றும் காவலா்கள் மூலம் ரூ. 28.34 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை தலைமைக்காவலரின் குடும்பத்துக்கு வழங்கும் நிகழ்வு கரூா் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் காவலா்கள் நண்பா்கள் உதவம் கரங்கள் நிா்வாகிகள் ரூ. 28.34 லட்சத்தை, தலைமைக் காவலா் பிரகாஷின் மனைவி முத்துலட்சுமியிடம் வழங்கினா்.