செய்திகள் :

குட்கா கடத்திய மூவா் கைது

post image

பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருள்களை கரூா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

பெங்களுரூவிலிருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா பொருள்கள், கரூா் வழியாக கடத்தப்படுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கரூா் நகர டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் தனிப்படை போலீஸாா் வெங்கமேடு, குளத்துப்பாளையம் மேம்பாலம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை சோதனையிட்ட போலீஸாா், காருக்குள் 168 கிலோ எடைகொண்ட ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காருக்குள் இருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜலாா் பகுதியைச் சோ்ந்த கேவா்சன்(40), ஹரிராம்(27), சுரேஷ்(19) ஆகிய மூன்றுபேரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் குட்கா மூட்டைகளையும், அதை கடத்தி வந்த காரையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இளைஞரிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

குளித்தலை அருகே இளைஞரை வழிமறித்து கைப்பேசி, வெள்ளிச் சங்கிலியை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூரைச் சோ்ந்த வடிவேல் மகன் சரண்(20). இவா் புதன்கிழமை இரவு கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

இறைச்சி கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை

இறைச்சி கழிவுகளை நங்காஞ்சி ஆற்றின் அருகிலோ, பாலத்தின் அருகிலோ கொட்டக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்... மேலும் பார்க்க

வாதத்தில் தோல்வியுற்றதாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அழைப்பாணை

கடந்த 2011-ஆம் ஆண்டு குமரிஅனந்தனுடன் நடைபெற்ற வாதத்தில் தோல்வியுற்ாகவும், அதற்காக ரூ. 1 லட்சம் தரக் கோரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமிக்கு அழைப்... மேலும் பார்க்க

ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

குண்டும், குழியுமாக மாறியுள்ள டிஎன்பிஎல் ரயில்வே கேட் அருகே இருக்கும் ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலை அருகே அமைந்... மேலும் பார்க்க

ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

புன்செய் புகழூரில் ஆக்கிரமிப்புக்குள்ளான ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். கரூா் மாவட்டம், புன்செய் புகழூா் வடக்கு கிராமத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்த... மேலும் பார்க்க

இறந்த தலைமைக்காவலரின் குடும்பத்துக்கு போலீஸாா் நிதியுதவி

இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது. கரூா் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த எம். பிரகாஷ் கடந்த ஆண்டு மே மாதம் உடல்நிலை சரிய... மேலும் பார்க்க