China: ``எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ...
ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்
குண்டும், குழியுமாக மாறியுள்ள டிஎன்பிஎல் ரயில்வே கேட் அருகே இருக்கும் ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலை அருகே அமைந்திருக்கும் ரயில்வே குகைவழிப்பாதைக்கு செல்லும் சாலை மண் சாலையாக குண்டும், குழியுமாக, செடிகொடிகளால் புதராக உள்ளது. மேலும் குகைவழிப்பாதைக்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் எதுவும் கிடையாது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகிறாா்கள். எனவே ரயில்வே குகைவழிப்பாதைக்குச் செல்லும் மண்சாலையை தாா்சாலையாக மேம்படுத்தி, மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.