செய்திகள் :

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; காயங்களுடன் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள்!

post image

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவதும், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்து செல்வதும் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினம் மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் அடிக்கபடி பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை, நம்பியார் நகர் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சையில் மீனவர்

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் சிலர் கூறுகையில், ``நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சந்திரபாபு என்பவருக்கு சொந்தமான பைபர் படகிலும், சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகிலும் 11 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். இன்று காலை கோடியக்கரை மற்றும் தோப்புத்துறைக்கு கிழக்கே 26 நாட்டில்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கள் படகுகள் மீது வெடிகளை வீசினர். இதனால் நாங்கள் அச்சத்துக்கு ஆளாகினோம். நிலைமையை உணர்ந்த நாங்கள் அந்த பகுதியில் இருந்து செல்ல முயன்றோம். ஆனால், அதற்குள் இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கள் படகை சுற்றி வளைத்தனர்.

பின்னர், படகில் இருந்த 11 மீனவர்களையும் தாக்கினர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இந்த தாக்குதலால் நாங்கள் நிலை குலைந்தோம். மீனவர் அணிந்திருந்த நகை, படகு இன்ஜின், வலை, ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையடித்தனர். படகு இன்ஜினை கொள்ளையடித்ததால் நாங்கள் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தோம். இதில், நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், உதயசங்கர், சிவசங்கர், கிருபா, கமலேஷ், விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் ஆகிய 11 மீனவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில், மீன்பிடிக்க வந்த சக மீனவர்கள் உதவியுடன் கரை வந்து சேர்ந்தோம். காயம்பட்ட மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையில் மீனவர்கள்

தாக்கியதில் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் சிவசங்கர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது போன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் மீனவர்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் போது, இலங்கை அரசு இதை செய்ய சொல்வதாக சொல்லி தான் அடித்தனர். இது போன்ற தாக்குதல்களால் நாங்கள் உடல் ரீதியாகவும், உடமைகளை இழந்து பாதிக்கப்படுகிறோம். வாழ்வாதாரத்தையும் இழக்கிறோம். அரசு எங்கள் உடமைகளை மீட்டுத்தரவேண்டும். இதற்கு தீர்வு கண்டு இனி இது போல் நடக்காமல் தடுத்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாங்கள் கடலில் நிம்மதியாக மீன்பிடிக்க முடியும்" என்றனர்.

கரூர்: 'உடல் பிரச்னையை தீர்க்கிறேன்' - இளம்பெண்ணிடம் ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய போலி சாமியார் கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெப்பக்குளம் தெருவில் உள்ள கருப்பசாமி கோயிலில் கடவூர் தாலுகா, கரிச்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது: 38) என்பவர் பொது மக்களுக்கு குறி சொல்லி வேண்டுதல்களை நிறை... மேலும் பார்க்க

விருதுநகர்: குடும்பப் பிரச்னை; மாமியாரை கிணற்றில் தள்ளிய மருமகன் - போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து. இவர் மானூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த வீரேஷ் இருளாயி தம்பதியினரின் மகளான சத்யாவை திருமணம் செய்து கொண்டா... மேலும் பார்க்க

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி கொலை -கந்துவட்டி தொழில் செய்த பாஜக பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் பா.ஜ.க-வின் ஒன்றிய செயலாளர். கந்துவட்டி தொழில் செய்து வந்த இவரிடம் நடுவிக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கியு... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `பட்டியலின மக்கள் 13 பேர் உயிரிழப்பு' - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு

கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்டவர்களின... மேலும் பார்க்க

தூத்துக்குடி : பள்ளி சிறுமி கர்ப்பம்; போக்சோவில் பள்ளி ஆசிரியர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இதே மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான மணிகண்டன் என்பவர், கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்... மேலும் பார்க்க

அயர்ன் பாக்ஸில் மின்கசிவு; சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தவர் லட்சுமிபிரியா. இவர், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த சக்திமுருகன் என்பவரது மனைவி. 33 வயது நிரம்பிய இவர... மேலும் பார்க்க