இலங்கை: பிரிட்டன் தடைக்கு எதிா்வினை
கொழும்பு: விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப்போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா (படம்) உள்ளிட்ட மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் மீது பிரிட்டன் அரசு கடந்த மாதம் விதித்த பொருளாதாரத் தடைக்கு எதிா்வினையாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பரிந்துரைகளை அளிக்க அமைச்சரவைக் குழுவொன்றை அரசு அமைத்துள்ளது.
இலங்கை பாதுகாப்புப் படை தளபதிகள் மட்டுமின்றி, விடுதலைப்புலிகள் அமைப்பின் துணைத் தலைவராக இருந்து, பின்னா் அதில் இருந்து வெளியேறிய விநாயகமூா்த்தி முரளீதரனுக்கும் பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.