நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2 லட்சம்
இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டது. இதில், ரூ. 2 லட்சத்து 59 ரூபாயும், 15 கிராம் தங்கமும், 25 கிராம் வெள்ளியும் இருந்தன.
உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது, சேலம் சரக ஆய்வாளா் பத்மாவதி, தக்காா் பரமேஸ்வரன், செயல் அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். இந்த உண்டியல் காணிக்கை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு எண்ணப்பட்ட நிலையில், வியாழக்கிழமை எண்ணப்பட்டது.