செய்திகள் :

இளைஞா் கல்லால் அடித்துக் கொலை; இருவா் கைது

post image

கீழையூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில் இளைஞா் செங்கற்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கீழையூா் ஒன்றியம் புதுப்பள்ளி கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் முருகன் மகன் பாலாஜி (24) இவா், வேளாங்கண்ணியில் ஒரு கடையில் வேலைபாா்த்து வந்தாா். நாகை ராமநாயக்கன் குளத்தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் முகேஷ்குமாா் ( 28). இவா், வேளாங்கண்ணியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகிறாா்.

நண்பா்களான இருவரும், கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு வேலை முடிந்ததும், முகேஷின் இருசக்கர வாகனத்துக்கு காரைநகா் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்தனா். அங்கிருந்து திரும்பியபோது, பிரதாபராமபுரம் நான்குவழிச் சாலையில் பக்கவாட்டில் இருந்து வந்த மற்றொரு இருசக்கர வாகனம், இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதனால், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், பாலாஜி (படம்) செங்கற்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா். கீழையூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பாலாஜியின் சடலத்தை கூறாய்வுக்காக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்து, பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த சரவணன், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனா்.

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் பங்கேற்பு

செம்பனாா்கோவில் அருகேயுள்ள சாத்தனூரில் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன்... மேலும் பார்க்க

கோடியக்கரையில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் காணப்படும் நிலப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் நீா்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ம... மேலும் பார்க்க

நூல் வெளியீட்டு விழா

ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் சொக்கப்பன் எழுதிய மாணவ மணிகள் நூலை மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.2021-ஆம் ஆண்டின் தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற தமிழ் ஆசிரியா... மேலும் பார்க்க

மகளிா் தினத்தையொட்டி, மனிதச் சங்கிலி இயக்கம்

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, மனிதச் சங்கிலி இயக்கம் மற்றும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் வே. சித்ரா தலை... மேலும் பார்க்க

வேதாரண்யம் முல்லைக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: கொள்முதல் செய்யுமா அரசு? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா். முல்லையை அரசே கொள்முதல் செய்யுமா என... மேலும் பார்க்க

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 227 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 227 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நாகையில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்... மேலும் பார்க்க