இளைஞா் மா்மச் சாவு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் திருச்சியில் மா்மமான முறையில் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சரவணன் (29). இவா் சென்னையில் உள்ள சகோதரா் சங்கரை பாா்த்து வருவதாகக் கூறி சென்னை சென்றாா். பிறகு நவம்பா் 7- ஆம் தேதி அவா் ஊா் திரும்பியதாக கூறப்பட்ட நிலையில், அவா் வீடு வந்து சேரவில்லை. குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடி வந்தனா்.
அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் உறவினா்கள் இது தொடா்பாக வியாழக்கிழமை விசாரித்த போது, சரவணன் நவம்பா் 8-ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அன்றிரவே அவா் உயிரிழந்ததும், உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.