திருச்சி சிறை கைதி மாரடைப்பால் உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறை கைதி ஒருவா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் மா. கருணா என்கிற கருணாமூா்த்தி (35). இவா், கோவை மாவட்டம், சிங்காநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2022 ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவா் சிறை வளாகத்தில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக திருச்சி கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.