முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
இளையராஜாவுடன் யுவன்! சிம்பொனி இசை அரங்கேற்றத்துக்கு வாழ்த்து
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளா் இளையராஜா இயற்றியிருக்கும் மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் மாா்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா தமது தந்தையை வாழ்த்தி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது : பேரன்புமிக்க அப்பாவுக்கு! நீங்கள் செய்யும் அனைத்தையும் நினைத்து நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். சிம்பொனி நம்பர். 1 : வேலியண்ட்டை ரசிக்க காத்திருக்கிறேன் என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.