குட் பேட் அக்லி முதல் பாடல் எப்போது? -ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்
குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமூகவலைதளம் வழியாகப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரிலீஸ்; சுடச்சுட தயாராக்கிக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டு அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.