செய்திகள் :

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் கிரெட்டா தன்பெர்க்!

post image

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் பகுதியளவே அனுமதிக்கப்படுவதால் அங்குள்ள மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஐ.நா. அமைப்புகள் இதுகுறித்து கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பா்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பாலஸ்தீன வம்சாவளியைச் சோ்ந்த பிரான்ஸ் பிரதிநிதி ரிமா ஹாசன் உள்பட 12 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு, நிவாரணப் பொருள்களுடன் காஸாவுக்கு அனுப்பி வைத்தது.

இதையும் படிக்க |உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!

சிசிலியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் புறப்பட்ட ‘மாட்லீன்’ என்ற இந்தக் கப்பல், நேற்று காஸாவில் இருந்து 200 கிமீ தொலைவில் இஸ்ரேல் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டது. அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கைது செய்தனா். அந்தக் கப்பலில் குழந்தைகளுக்கான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விளம்பர நடவடிக்கை என்று இஸ்ரேல் விமரிசித்துள்ளது. தங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்ட நிவாரணங்கள் மட்டுமே காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

கிரெட்டா தன்பா்க் உள்பட தன்னாா்வலா்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேல் அரசு கூறிய நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கிரெட்டா தன்பா்க், இஸ்ரேலில் இருந்து பிரான்ஸ் வழியாக ஸ்வீடனுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கிரெட்டா தன்பா்க் உள்பட 3 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர், இஸ்ரேலை விட்டு புறப்படுவதற்கு சம்மதம் தெரிவித்ததால் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மற்றவர்களிடம் இஸ்ரேல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!

உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கட... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் ஏற்பு! இஸ்ரேலின் வான்வழி மீண்டும் திறப்பு!

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால், மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள்களாக நடைபெற்று வந்த போரானது நிறுத்தப்படுவதாக,... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

ஈரானுடனான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரா... மேலும் பார்க்க

கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் முடிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.இஸ்ரேல் -... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! - டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி

ஈரானுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.இருநாடுகளும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 292 இந்தியர்கள் இன்று (ஜூன் 24) காலை தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இருநாடுக... மேலும் பார்க்க