பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
இஸ்ரேலுக்கு கத்தார் பதிலடியும் மூன்றாம் உலகப் போரும்?
இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் தானி, இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் கொடுமைகள் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு - இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும். அதில் இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கத்தார் தலைநகர் தோஹாவின் மீது ஹமாஸின் தலைவர்களைக் குறிவைத்து, கடந்த செப்.9 ஆம் தேதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அத்துமீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இஸ்ரேல் மீது கத்தாரும் அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் மூன்றாம் உலகப் போர் அபாயம் ஏற்படலாம்.