பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார்.
ஹமாஸின் ஒப்புதல்
ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அந்தப் பரிந்துரைகளை திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்.
ஆனால், இதுவரை இந்தப் பரிந்துரைகளை ஹமாஸ் ஒப்புகொள்ளாமல் இருந்தது. இதனால், இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலையும் தொடர்ந்து வந்தது.

இன்னொரு பக்கம், இதை ஒப்புகொள்ள ஹமாஸிற்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, கால அவகாசம் தந்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஹமாஸ், ட்ரம்ப் பரிந்துரைகளை ஒப்புகொண்டுள்ளது.
பணயக் கைதிகளை விடுவித்தல், காசா தற்காலிகமாக பாலஸ்தீனிய தொழில்நுட்பக் குழுவால் (அரசியல் சாராத நிபுணர்கள்) நடத்தப்படும்... போன்ற ட்ரம்ப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் அறிவித்துள்ளது.
இதையடுத்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில்...
"ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அவர்கள் அமைதிக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை நம்புகிறேன். காசா மீது குண்டு வீசுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போது தான், அவர்கள் தங்களது பணயக் கைதிகளைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பெற முடியும். இப்போது குண்டு வீச்சை தொடர்வது மிகவும் ஆபத்தானது.
தீர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஏற்கெனவே ஆலோசனையில் இருக்கிறோம். இது காசாவைப் பொறுத்தது மட்டுமல்ல... நீண்ட காலமாக மத்திய கிழக்கில் எதிர்பார்க்கப்படுகிற அமைதியைக் குறித்தது" என்று பதிவிட்டுள்ளார்.