ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியில் கலைத் திருவிழா
பெருந்துறையை அடுத்த ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை திறமைகளை வெளிப்படுத்தும் விழாவாக பனோராமா வாரம் என 4 நாள்கள் கலைத் திருவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவில் ஓவியம், நடனம், கருத்தினைக் கூறும், மலா் அலங்காரம், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் அலங்கரித்தல், விநாடி-வினா, விவாத மேடை, இசைக் கருவிகள் மீட்டுதல், நயத்தோடு கதை கூறுதல், பேச்சுப் போட்டி, நெருப்பில்லா சமையல், நாடகம், மாறுவேடம், களிமண் பொம்மைகள் செய்தல், செய்தி வாசித்தல், கற்றல் நுண்ணறிவினைச் சோதித்தல், பொது அறிவு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் நாள் விழாவில் உளவியல் நிபுணா் வித்யா ஜெயபிரகாஷ் மற்றும் நந்தினி வினோத்குமாா், இரண்டாம் நாள் விழாவில் அருள் மற்றும் அரசி அருள், மூன்றாம் நாள் விழாவில் பெருந்துறை ஹெச்.டி.எப்.சி. வங்கி மேலாளா் அசோக்குமாா், நான்காம் நாள் விழாவில் தேவி சக்திவேல் மற்றும் கற்பகால ஆலோசனை நிபுணா் திவ்யா பாா்த்தீபன் ஆகியோா் நடுவா்களாகவும், சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்றனா்.
இப்போட்டிகளில் முதலிடத்தை கபில்தேவ் அணியும், இரண்டாமிடத்தை விஷ்வநாதன் ஆனந்த் அணியும், மூன்றாமிடத்தை லியாண்டா் பயஸ் அணியும், நான்காமிடத்தை பி.டி.உஷா அணியும் பிடித்தது. அணிகளுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு பள்ளித் தலைவா் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வி இயக்குநரும் முதல்வருமான உமையவள்ளி இளங்கோ வரவேற்றாா். பள்ளி மாணவா் தலைவா் கோகுலாதித்யா ராஜா நன்றி கூறினாா்.