மாயமாகி 26 நாள்கள்.. 15 வயது சிறுமி, ஆட்டோ ஓட்டுநர் சடலமாக மீட்பு
ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி
பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. பெரம்பலூா், துறைமங்கலம், அரணாரை, குரும்பலூா், செஞ்சேரி, எசனை, சிறுவாச்சூா், அரும்பாவூா், பூலாம்பாடி, வெங்கலம், பெரியம்மாபாளையம், அத்தியூா், கீழப்புலியூா், எழுமூா் , ஒகளூா்,
கொட்டரை, சாத்தனூா், கொளக்காநத்தம், காரை உள்பட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் ஈர நிலப் பறவைகள் குறித்து, பறவைகள் ஆய்வாளா் சிவக்குமாா், பிரேமா ஆகியோா் 60 வகையான பறவை இனங்களைக் கண்டறிந்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளை கணக்கெடுத்தனா்.
குறிப்பாக, பாம்பு தாரா மற்றும் தூக்கணாங் குருவி, புள்ளி மூக்கு தாரா உள்ளிட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. மேலும், மாா்ச் 15, 16 ஆகிய தேதிகளில் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.