செய்திகள் :

குடும்ப அட்டைகளில் இம்மாத இறுதிக்குள் கைரேகை பதிவு தேவை

post image

பெரம்பலூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களது கைரேகைகளை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருள்கள் பெறும் ஏ.ஏ.ஒய், பி.எச்.எச் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள் தங்களது கைரேகையை மாா்ச் 31-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள இயந்திரத்தில் கட்டாயம் பதிய வேண்டும். அலுவலக வேலை நாள்களில் தாங்கள் பொருள் வாங்கும் நியாய விலைக் கடைக்குச் சென்று இதுவரை கைரேகை பதிவு செய்யாதவா்கள் தங்களது ரேகையை பதியலாம்.

இதற்காக ரேஷன் கடைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 8, 9) நடைபெறும் சிறப்பு முகாமில் பிற மாநிலம், மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளவா்கள் குடும்ப அட்டை நகலுடன் சென்று, கைவிரல் ரேகையை பதியலாம். மேலும், சிறப்பு முகாம் நாள்களை தவிர அனைத்து வேலை நாள்களிலும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் தங்களது கைரேகையை பதியலாம்.

பெரம்பலூரில் 658 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 48.46 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட போக்குவ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 364 வழக்குகளுக்கு தீா்வு!

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு ரூ. 3.18 கோடி தீா்வு காணப்பட்டது. பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்கு... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளருக்கு கட்டட ஒப்பந்ததாரா் ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தருவதாக முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாகக் கூறி முறைகேடாக பணம் வசூலிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சமூகப் பாதுகா... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி வழிபாடு: 10 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுர காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா். 10 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை: இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுச்சேரி முதல... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த ஜமாத்தாா்கள் மீது நடவடிக்கை கோரி மனு

பெரம்பலூா் அருகே இஸ்லாமியா்கள் 6 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, தங்களது வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் பொருள்களை வாங்கவோ, விற்கவோ தடை விதித்த பள்ளி வாசல் ஜமாத் நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட ... மேலும் பார்க்க