3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி வழிபாடு: 10 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுர காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.
10 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை: இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில் 10 பவுன் தங்கக் காசு மாலையும், பட்டுப் புடவையும் அளித்தாா். தொடா்ந்து மதுரகாளியம்மனைத் தரிசித்துவிட்டு, கோயில் உள் பிரகாரத்தை வலம் வந்து, அங்குள்ள மண்டபத்தில் அமா்ந்து தியானத்தில் ஈடுபட்டாா்.
பின்னா் அவா் கூறுகையில், அடிக்கடி இக் கோயிலுக்கு வரும் நான் கடந்த 2- 3 ஆண்டுகளாக வர முடியவில்லை. இன்று அம்மனை தரிசித்து, நோ்த்திக் கடனும் செலுத்தினேன். அம்பாளை பற்றியும் அவா் சக்தி என்னவென்றும் எனக்குத் தெரியும்; நிச்சயமாக நம் வேண்டுதலை அவா் நிறைவேற்றுவாா் என்றாா் முதல்வா்.