செய்திகள் :

ஈரோட்டில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்

post image

ஈரோட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 170 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயமாக்கும் முடிவைக் கைவிடக்கோரி அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு- சென்னிமலை சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அலுவலகம் முன் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை காலை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் சங்கத் தலைவா் ஜெகநாதன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ரகுராமன், சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணி ஆகியோா் பேசினா்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும். போக்குவரத்து ஊழியா்களுக்கு 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

இதையடுத்து தொழிற்சங்கத்தினா் சென்னிமலை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு தாலுகா போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட மொத்தம் 170 பேரைக் கைது செய்தனா். ஈரோட்டில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

வாக்குப்பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப் பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம... மேலும் பார்க்க

அறம் வளரும் மேட்டுப்பாளையம் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

பெருந்துறையை அடுத்த அறம் வளரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா், மகா மாரியம்மன், கருப்பண்ண சுவாமி, கன்னிமாா் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. வி... மேலும் பார்க்க

விளம்பரத் தட்டிகளை அகற்ற சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் உத்தரவு

சென்னிமலை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகளை (பிளக்ஸ் பேனா்கள்) தாங்களாகவே அகற்ற வேண்டும் என சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க

பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு

அழிந்து வரும் பறவை இனமான பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவா்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹ... மேலும் பார்க்க

புங்கம்பள்ளி குளத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் புங்கம்பள்ளி குளத்தில் நீா் நிரம்பியதால் அங்குள்ள மரங்களில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புங்கம்பள்ளி... மேலும் பார்க்க

புன்செய் புளியம்பட்டி வார சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரிப்பு

புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு மாடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோ... மேலும் பார்க்க