செய்திகள் :

``ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு கடிதம் கொடுத்தேன்..." - வைகோ பகிர்வு!

post image

சென்னை எழும்பூரில் மாவீரர் நாள் நிகழ்ச்சி மதிமுக சார்பில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ``விடுதலைப் புலிகள் என் கிராமத்தில், என் வீட்டில் ஒருவருடம் தங்கினார்கள். அவர்களுக்கு என் தாயார் ஒருவருடம் உணவு சமைத்துக் கொடுத்தார். ஆனால், என் கிராமத்திலிருந்து ஒருவர் கூட காவல் நிலையத்துக்குச் சென்று, வைகோ வீட்டில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள் எனக் கூறவில்லை. விடுதலைப் புலிகளை மாற்றி மாற்றி பல்வேறு இடங்களில் தங்க வைத்தேன். ஈழத்திற்கு வந்து தலைவர் பிரபாகரனை சந்திக்க வேண்டும் என, சீட்டு மூலம் இரண்டு முறை கூறிய பின்னர்தான் பிரபாகரன் நான் ஈழத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார்.

வைகோ-துரை வைகோ

பிரபாகரனைச் சந்திக்க இங்கிருந்து புறப்படும் முன், அங்கிருந்து உயிருடன் திரும்புவேனா என்பது உறுதியாகத் தெரியாது. அதனால், என் மனைவிக்கு பட்டு புடவை, என்னுடைய குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்தேன். ஏன் இந்த திடீர் அன்பளிப்பு என என் மனைவி கேட்டபோது, தி.மு.க வெற்றி பெற்றதை கொண்டாட வாங்கிக் கொடுத்தேன் என கூறினேன். யாருக்கும் தெரியாமல் ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு 6 பக்கம் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றேன். ரகசியமாக நான் ஈழம் சென்ற செய்தி, தமிழ்நாடு முழுவதும் பரவியது.

அப்போது 'வைகோ ஈழத்திற்கு சென்றதற்கும் தி.மு.க-விற்கு எந்த சம்மதமும் இல்லை' என அறிக்கை வெளியிட்டனர். இதனை தெரிந்துகொண்ட பிரபாகரன், உடனடியாக என்னைத் தமிழ்நாடு செல்ல வேண்டும் என தெரிவித்தார். ஆனால் நான் செல்ல மாட்டேன் என கடுமையாக மறுத்தேன். இருப்பினும் அவர் வலியுறுத்தி கூறியதால், நான் தமிழ்நாடு திரும்ப சம்மதித்தேன். அடுத்த நாள் காலை 5 மணிக்கு புறப்படும் முன், எனக்கு புட்டு, மீன், இறால் என விருந்து வைத்தார். என்னை தாக்குதலிருந்து காப்பாற்ற 57 விடுதலைப் புலிகளை அனுப்பி வைத்தார். அவரின் மனைவி, மகனின் பாதுகாப்புக்காக இரண்டு புலிகளைத்தான் அனுப்பினார் எனத் தெரிந்துக்கொண்டேன்.

வைகோ - பிரபாகரன்

ஒருவேளை நான் திரும்பும் வழியில் மாட்டிக்கொண்டால் என்னை சித்திரவதை செய்வார்களே என்ன செய்வது எனக் கேட்டு, எனக்கும் ஒரு சைனடு குப்பி வேண்டும் எனக் கேட்டேன். அப்படி ஒன்றும் நடக்காது என அதைக் கொடுக்க மறுத்தவர், என்னுடைய வற்புறுத்தலால், பிரபாகரன் தனது கழுத்தில் இருந்த ஒரு குப்பியை எனக்கும் ஒரு கயிற்றில் கட்டி, என் கழுத்தில் கட்டிவிட்டார். இப்போதும் அந்த குப்பி பத்திரமாக என்னிடம் உள்ளது. புறப்பட்டு வந்த நேரத்தில் காட்டில் கடும் பசியாக இருந்த நேரத்தில் மான் கறியை புலிகள் எனக்கு கொடுத்தார்கள். மகிழ்ச்சியுடன் எழுந்து அதைச் சாப்பிட்டேன். அதன் பின் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

எந்த இயக்கத்திற்கா உழைத்தேனோ, எந்த இயக்கத்தை நேசித்தேனோ, அந்த இயக்கமே என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது. 30 ஆண்டு காலம் தி.மு.க-வில் பயணித்தபோது 27 முறை சிறைக்கு சென்றேன். தி.மு.க-வின் தலைவருக்கு உயிருக்கு உயிரான, மெய்காப்பாளராக இருந்திருக்கிறேன். ஆனாலும், நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். 1964-ல் அண்ணாவின் முன்னிலையில்தான் அங்கீகாரம் பெற்றேன். ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகளாக அரசியல் பணி செய்து வருகிறேன்.

வைகோ - பிரபாகரன்

எனது வாழ்நாளில் 60 ஆண்டுகள் பொதுவாழ்விலேயே கடந்துவிட்டது. கட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு 5 இளைஞர்களை இணைக்க முயற்சி செய்யுங்கள். கொடி இல்லாத கொடிமரங்களில் கொடிகளை ஏற்றுங்கள். அமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துங்கள். அப்போது தான் நமக்கான நாள் வரும்” என தொண்டர்களுக்கு வைகோ அறிவுரை வழங்கினார்.

சுகாதார சீர்கேடு, கட்டிட இடிபாடு; அச்சத்துடன் படிக்கும் மாணவர்கள்... ஓமந்தூர் அரசு பள்ளியின் நிலை!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அரசுப் பள்ளி இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. தமிழகத்தின் முன்னாள் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராம... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: குப்பை கூளங்கள் - கழிவு நீர் - துர்நாற்றம்... சுகாதாரத்தை காக்குமா நகராட்சி?

சுகாதார சீர்கேடுதிருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சிவராஜ்பேட்டை 3-வது வார்டில் 350க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கழிவுநீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு ... மேலும் பார்க்க

UDHAYANIDHI-ன் `K' Plan...பதறும் மந்திரிகள்?! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,கூட்டணிக் கட்சிகள், விஜய் என அடுத்தடுத்து பல்வேறு குடைச்சல்கள். இந்த நெருக்கடிகளை சமாளிக்க புதிய ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கும் உதயநிதி. இதைக் கேள்விப்பட்டு பதற்றத்தில் ம... மேலும் பார்க்க

இசைவாணி பாடல் விவகாரம்: திருமாவளவன் - ஹெச்.ராஜா - சேகர்பாபு கூறுவதென்ன?

சர்ச்சையான இசைவாணி பாடல்..ஐயப்ப சுவாமி குறித்து ஏற்கத்தகாத வகையில் பாடல் பாடியதாக கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக் குழுவைச் சேர்ந்த பாடகி இசைவாணி மீது பாஜகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் புகார் அளித்துள்ளன... மேலும் பார்க்க

ராகுல் காந்தி பிரிட்டன் சிட்டிசனா? - தீவிரமாக ஆராயும் மத்திய உள்துறை!

கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவர்... மேலும் பார்க்க

``தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு; திமுக அரசு சமூக நீதி வழங்காது" - ராமதாஸ் காட்டம்!

இந்திய அரசியலில் சமூகநீதிக் காவலர் என அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்த தினம் இன்று. இதை முன்னிட்டு சாதிவாரி கணக்கெடுப்புக்கு குரலெழுப்பியுள்ளார் பாமக தலைவர் ராமதாஸ். தெலுங்கானாவில் சாத... மேலும் பார்க்க