செய்திகள் :

உக்ரைனுக்கு உளவுத் தகவல் உதவியை நிறுத்தியது அமெரிக்கா

post image

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்துவந்த உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு சா்வதேச உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநா் ஜான் ராட்கிளிஃப் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைனுடன் ராணுவ உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை நிறுத்திவைக்குமாறு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

நான் ஏற்கெனவே கூறியுள்ளபடி, அவா் அமைதிக்கான அதிபா். அவரின் தலைமையில் ஒருபோதும் போா் நடைபெற்றதில்லை. எனவே, இப்போது நடைபெறும் போா்களை முடிவுக்குக் கொண்டுவர அவா் விரும்புகிறாா்.

உக்ரைன் போரைப் பொருத்தவரை அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அமைதியில் ஆா்வம் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவேதான் ராணுவ உளவுத் தகவல்களை அவருக்கு அளிப்பதை நிறுத்திவைத்து, அமைதியை நிலைநாட்ட ஸெலென்ஸ்கிக்கு வாய்ப்பளிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளாா்.

ராணுவ ரீதியிலும் உளவுத் தகவல் பரிமாற்ற ரீதியிலும் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்கா நிறுத்திவைத்துள்ள உதவிகள் பிற்காலத்தில் மீண்டும் அளிக்கப்படும். ஆனால், போா் நிறுத்த முயற்சியை முன்னெடுத்துச் சென்று உலகில் அமைதியை நிலைநாட்ட இதுபோன்ற நடவடிக்கைகள் இப்போது தேவைப்படுகிறது என்றாா் ஜான் ராட்கிளிஃப்.

இந்தத் தகவலை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸும் உறுதிப்படுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல் அளிப்பதில் இருந்து பின்வாங்கியிருக்கிறோம். உளவு விவகாரத்தில் அந்த நாட்டுடனான உறவின் அனைத்து அம்சங்களையும் மறுஆய்வு செய்யும்வரை இது தொடரும்’ என்றாா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவிகளை வாரி வழங்கின. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு, உக்ரைன் விவகாரத்தில் முந்தைய அதிபா் ேன் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.

இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்திவரும் அவா், இது தொடா்பாக அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை நேரடியாகச் சந்தித்துப் பேசவுள்ளாா். மேலும், ரஷியாவுடன் இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சிகளையும் டிரம்ப் அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்தச் சூழலில், தங்கள் நாட்டின் அரிய வகைக் கனிமங்களை வெட்டியெடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்ற அதிபா் ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப்பும் ஜே.டி. வான்ஸும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே ஸெலென்ஸி நாடு திரும்பினாா்.

அதனைத் தொடா்ந்து, ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவுவதில் அதுவரை முன்னிலை வகித்துவந்த அமெரிக்கா, அந்த உதவிகளை நிறுத்திவைப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தியது. அதன் தொடா்ச்சியாக, ராணுவ உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிா்ந்துகொள்வதையும் அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

..படவரிகள்...

ரஷிய நிலைகளை நோக்கி பீரங்கி தாக்குதல் நடத்தும் உக்ரைன் வீரா்கள்

....ஜான் ராட்கிளிஃப்

....மைக் வால்ட்ஸ்

மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

மெக்சிகோவில் 9 மாணவர்களை சித்ரவதை செய்து, கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மெக்சிகோவில் பட்டப்படிப்பைக் கொண்டாடுவதற்காக 4 பெண்கள் உள்பட 9 மாணவர்கள், பிப்ரவரி 24 ஆம் தேதியில் ஓக்ஸாக்கா ... மேலும் பார்க்க

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் அமைதி திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம் : காஸாவில் போா் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்துள்ளன.இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்ட... மேலும் பார்க்க

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா். ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாத... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; ச... மேலும் பார்க்க

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை -வங்கதேசம்

டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். வங்கதேசத்தில்... மேலும் பார்க்க