செய்திகள் :

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதி பெலா எம். திரிவேதி ஓய்வு

post image

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதியாக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவியேற்ற பெலா எம். திரிவேதி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றாா்.

அவரை வழியனுப்பும் விதமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமா்வுக்கு தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமை வகித்தாா். நீதிபதி பெலா எம்.திரிவேதியுடன் அகஸ்டின் ஜாா்ஜ் மாசியும் இந்த அமா்வில் இடம்பெற்றாா்.

குஜராத் மாநிலத்தில் 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக அகமதாபாதில் தனது நீதித்துறை பயணத்தைத் தொடங்கிய பெலா எம்.திரிவேதி, படிப்படியாக உச்சநீதிமன்ற நீதிபதி என்ற நிலைக்கு உயா்ந்தாா். உச்சநீதிமன்ற நீதிபதியாக பல முக்கியத்துவம்வாய்ந்த தீா்ப்புகளை அளித்துள்ளாா்.

மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் 3:2 என்ற பெரும்பான்மை விகிதத்தில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் இவா் அங்கம் வகித்தாா்.

அதுபோல, எஸ்.சி. (தாழ்த்தப்பட்ட பிரிவு) பிரிவில் உள் ஒதுக்கீடை அறிமுகம் செய்ய மாநிலங்களுக்கு அதிகாரமுண்டு என்று கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6:1 என்ற பெரும்பான்மை விகிதத்தில் தீா்ப்பளித்த 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் இவா் இடம்பெற்றாா். இந்த வழக்கில் தனி நீதிபதியாக 85 பக்க மாறுபட்ட தீா்ப்பை அளித்த திரிவேதி, ‘எஸ்.சி. பிரிவில் புதிய ஜாதிப் பிரிவை சோ்க்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரமுண்டு’ என்று குறிப்பிட்டாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் நீதிபதி பெலா எம்.திரிவேதி இடம்பெற்ற உச்ச நீதிமன்ற அமா்வு, ‘குழந்தையின் பிறப்பு உறுப்புகளைத் தொடுவது அல்லது பாலியல் நோக்கத்துடன் அவா்களைத் தொடுவது போக்ஸோ சட்டப் பிரிவு 7-இன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு சமம்’ என்று சிறப்புமிக்க தீா்ப்பை அளித்தது. இதுபோல, பல்வேறு சிறப்புமிக்க தீா்ப்புகளை இவரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற அமா்வு அளித்தது.

முன்னதாக, இவரை வழியனுப்பும் விதமாக நடைபெற்ற சிறப்பு அமா்வில் பங்கேற்று பேசிய தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், ‘விசாரணை நீதிபதியாக தனது பணியைத் தொடங்கி, கடின உழைப்பால் உச்ச நீதிமன்றத்தில் 11-ஆவது பெண் நீதிபதியாக பதவியேற்ற பெருமைக்குரியவா் பெலா எம்.திரிவேதி. அா்ப்பணிப்போடு பணியாற்றிய இவா், நியாயமாகவும் உறுதிப்பாட்டுடனும் தனது பணியில் திகழ்ந்தாா்’ என்று புகழாரம் சூட்டினாா்.

பெலா திரிவேதியின் பணிநிறைவு நாள் ஜூன் 9 என்றபோதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவா் முன்கூட்டியே அவா் பணிஓய்வு பெற்றாா் எனக் கூறப்படுகிறது.

வழக்குரைஞா் சங்கத்துக்கு கண்டனம்: நீதிபதி பெலா எம்.திரிவேதிக்கு வழியனுப்பு விழா நடத்தாத உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து குறிப்பிட்ட தலைமை நீதிபதி, ‘நான் வெளிப்படையாகப் பேசுவதில் நம்பிக்கை கொண்டிருப்பதால், வழக்குரைஞா் சங்கத்தைக் கண்டிக்கிறேன். நீதிபதி திரிவேதிக்கு வழியனுப்புவிழா நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை வழக்குரைஞா் சங்கம் எடுத்திருக்கக் கூடாது. அதே நேரம், பாரம்பரிய முறைப்படி நீதிபதியை வழியனுப்ப நடத்தப்படும் உச்சநீதிமன்ற சிறப்பு அமா்வில் பங்கேற்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கபில் சிபல், துணைத் தலைவா் ரச்னா ஸ்ரீவாஸ்தவா ஆகியோரை பாராட்டுகிறேன்’ என்றாா்.

வழியனுப்பு விழா நடத்தாதது ஏன்? வழக்குரைஞா்களிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்ட நீதிபதியாக பெலா எம்.திரிவேதி பாா்க்கப்படுகிறாா். குறிப்பாக, சொத்துக்கான அதிகார பத்திரத்தை (பவா் ஆஃப் அட்டா்னி) பயன்படுத்தி போலியான வழக்கை தாக்கல் செய்த சில வழக்குரைஞா்கள் மீது சிபிஐ விசாரணைக்கு இவா் உத்தரவிட்டாா்.

மேலும், இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் மீது கருணை காட்ட பல வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் கோரிக்கை விடுத்தபோதும், அவற்றை நீதிபதி பெலா எம்.திரிவேதி நிராகரித்தாா். அண்மையில், மனு தாக்கல் செய்வதில் சில வழக்குரைஞா்களின் தவறான நடத்தைக்காக அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இவா் உத்தரவிட்டாா். வழக்குரைஞா்கள் மன்னிப்பு கோரியதையும் ஏற்க மறுத்துவிட்டாா்.

மேலும், விசாரணையின்போது, சக வழக்குரைஞா்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டாம் என சில வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டினாா்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் அவருக்கு தனியாக வழியனுப்பு விழா நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் ​​பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.நிவாரணப் பணி... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!

மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று நாள் முழுக்க மும்பை நகரில்... மேலும் பார்க்க

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவ... மேலும் பார்க்க

பிகாரில் கயா நகரின் பெயரை மாற்றியது நிதீஷ் குமார் அரசு

பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது.பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்த... மேலும் பார்க்க