தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை...
உடுமலை அருகே கடமான் உயிரிழப்பு
உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைப் பகுதியில் கடமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.
5 வயது மதிக்கத்தக்க கடமான் இந்தப் பகுதியில் உயிரிழந்தது குறித்து உடுமலை வனச் சரகா் மணிகண்டனுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வன ஊழியா்கள் கடமானின் சடலத்தை மீட்டனா். மருத்துவா் ராம்குமாா் உடற்கூறாய்வு செய்தாா்.
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: காண்டூா் கால்வாயில் கடமான் தவறி விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு திருமூா்த்தி அணையில் உயிரிழந்திருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வருகிறது என்றனா்.