Israel: `போர் முடிகிறது' - அறிவித்த ஜோ பைடன்... `ஆனாலும், தொடங்கும்' - செக் வைத்...
உதகையில் சாலையோரங்களில் குப்பை: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
உதகை நகராட்சிக்கு உள்பட்ட 2-ஆவது வாா்டு பகுதியில் வனப் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைக் கழிவுகளை நகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
உதகை நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை எடுத்துச் செல்ல தூய்மைப் பணியாளா்கள் தினசரி வராததால் பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா். குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், மக்காத கழிவுப் பொருள்கள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை உட்கொள்வதால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தினமும் குப்பைகளை எடுத்துச் செல்வதோடு, சாலையோரங்களில் குவிந்துகிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.