ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று (அக். 3) நடைபெற்றுள்ளது.
‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், உமாபதி ராமையா. இந்த நிலையில், நடிகர் தம்பி ராமையா கதை மற்றும் வசனம் எழுதியுள்ள அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தை அவர் இயக்குகின்றார்.
கண்ணன் ரவி குழு மற்றும் கந்தரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், நடிகர்கள் நட்டி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தர்புகா சிவா இசையில் உருவாகும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது.
இத்துடன், நடிகர்கள் தம்பி ராமையா, இளவரசு, கிங்ஸ்லே, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், வீஜே ஆண்ட்ரூஸ், சத்யன், ஜாவா சுந்தரேசன், வடிவுக்கரசி, சாந்தினி தமிழரசன், ஸ்ரீத்தா ராவ், விஜி சந்திரசேகர், கிங்காங், தேவி மகேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: இந்திய படங்களைத் திரையிட மறுக்கும் கனடாவின் திரையரங்குகள்! ஏன்?