திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான ...
`உயிர் உள்ள வரையில்' - வைக்கம் பெரியார் நினைவகத்தில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலினின் படம்
கேரளாவில், வைக்கம் மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தினரும் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி 1924-ல் போராட்டம் நடைபெற்றது.
இதில், பெரியார் கலந்துகொண்ட பிறகு வலிமையடைந்த இந்தப் போராட்டத்தின் விளைவாக இறுதியில் திருவாங்கூர் சமஸ்தான அரசு, போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு சம்மதித்தது.
இந்த வெற்றியின் நினைவாக, அங்கே பெரியார் நினைவகமும், நூலகமும் பின்னாளில் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இவ்வாறிருக்க, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் புனரமைக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சார்பில் ரூ. 8 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், தி.க தலைவர் கி. வீரமணி, வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் நினைவகத்தில் அவர் தொடர்பான புத்தகங்கள், அவரின் வாசகம் இடம்பெற்ற புகைப்படங்கள், அறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல இடம்பெற்றிருக்கின்றன. அவற்றோடு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.
`நான், திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன்.' என்ற வாசகம் அடங்கிய பெரியார் படத்துக்கு கீழே, `ஒரு மனிதன் உயிர் வாழ்ந்திருப்பதினால் உயிர் உள்ள வரையில் காரியம் செய்ய வேண்டியது கடமை என்பதற்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கக்காரர்களின் வாழ்வின் லட்சியம்.' என்ற வாசகம் அடங்கிய உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...