மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!
உறுப்புகள் தானம்: இளைஞரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
கடலாடி அருகே விபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மேலக்கிடாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சஞ்சய் (22). மதுரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த செவ்வாக்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயம் அடைந்தாா்.
மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, சஞ்சயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோா் முன்வந்தனா். இதனடிப்படையில், அவரது உடல் உறுப்புக்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.
பின்னா், சொந்த ஊரான மேலக்கிடாரத்துக்கு சஞ்சயின் உடல் கொண்டு செல்லப்பட்டது. புதன்கிழமை மாலை 3 மணி அளவில் பரமக்குடி சாா்-ஆட்சியா் அபிலாஷா கவுா் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினாா். பின்னா், அந்த கிராம மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.