செய்திகள் :

உலகளவில் சாதனை படைத்த விஜய்யின் விமானம்!

post image

சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானத்தை ஒரே நேரத்தில் அதிகளவில் ட்ராக் செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன.

தவெக தலைவர் விஜய்யும், தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியிலிருந்து சனிக்கிழமையில் தொடங்கினார். இந்த பயணத்தின்போது, சென்னையில் இருந்து திருச்சி செல்ல அவரின் தனி விமானத்தையே பயன்படுத்தினார்.

சென்னையில் சனிக்கிழமை காலை 8.55 மணிக்குப் புறப்பட்ட விஜய்யின் விமானம், திருச்சிக்கு 9.34 (39 நிமிடங்கள்) மணிக்கு சென்றடைந்தது.

இந்த நிலையில், உலகளவில் ஒரே நேரத்தில் அதிகளவில் ட்ராக் (Track) செய்யப்பட்ட விமானம் என்ற பெருமையை விஜய்யின் விமானம் பெற்றுள்ளது. திருச்சி சென்ற விஜய்யின் விமானத்தை, நேற்று ஒரே நேரத்தில் சுமார் 9,000 பேர் ட்ராக் செய்துள்ளனர்.

விஜய் பயன்படுத்திவரும் விடி டிஎஸ்ஜி ஹாக்கர் 800எக்ஸ்பி (VT TSG Hawker 800XP) என்ற தனி விமானம், சொகுசு போன்றல்லாமல் நடுத்தர விமானம்தான் என்று கூறப்படுகிறது.

இதன் விலை சுமார் ரூ. 100 கோடி என்று கூறப்படுவதுடன், இதில் 8 முதல் 13 பேர் பயணிக்கலாம் என்றும், 4,000 கி.மீ. தொலைவுக்குச் செல்லக் கூடியது என்பதால், ஓய்வறையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!

TVK Leader Vijay's flight becomes most tracked flight in World History

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 14) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓசூர் விம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 85,711 பேருக்கு வீட்டுமனை பட்டா - முதல்வர் அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையி... மேலும் பார்க்க

விராலிமலை: கி.பி 13 ஆம் நூற்றாண்டு வீரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள மைலாப்பட்டி மலை மீது சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்துத் தானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் மு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2,885 கோடியில் திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 14) தொடக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி... மேலும் பார்க்க

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன்: விஜய்

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.பெரம்பலூருக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் செய்யாமல் சென்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி செப். 16-ல் தில்லி பயணம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செப். 16) தில்லி செல்கிறார்.அண்மையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக பொதுச் ... மேலும் பார்க்க