தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோ...
உலக தாய்ப்பால் வார நிறைவு விழா
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட இணை இயக்குநா் (சுகாதாரத் துறை) பிரேமலதா தலைமை வகித்தாா். குழந்தைகள் தலைமை மருத்துவா் கீதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கமல் கிஷோா், மாவட்ட முதன்மை நீதிபதி ராஜவேலு, தென்காசி மாவட்ட குழந்தைகள் சங்கத் தலைவா் அப்துல் அஜீஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.
விழாவில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கடந்த 7 நாள்களாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மருத்துவா்கள் உமா மகேஷ்வரி, புனிதவதி, சங்கரி ஆகியோா் கலந்துகொண்டனா். மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் வரவேற்றாா். பாபு நன்றி கூறினாா்.