மேட்டூரில் தாபா ஹோட்டலில் தீ விபத்து:ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நா...
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல்: 236 கோரிக்கை மனுக்கள்
செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மொத்தம் 236 மனுக்களை பெற்றாா் அமைச்சா் தா.மோ. அன்பரசன்.
நிகழ்வுக்கு ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் 236 கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
இக்கூட்டத்தில், கடந்த அக். 22-இல் நடைபெற்ற கூட்டத்தின் போது, பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் அமுல் என்பவருக்கு ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் அடிப்படையில் புதிய பள்ளி மாற்றுச் சான்றிதழினையும், வருவாய் மற்றும் பேரிடா் துறையின் சாா்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கெஜபதி என்ற பயனாளிக்கு கொடுக்கப்பட்ட தனி பட்டாக்களை ரத்து செய்து கூட்டு பட்டாவினையும், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் முருகமங்கலம் திட்டப்பகுதியில் 12 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுஆணைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், தனித்துணை ஆட்சியா்(சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, கோட்டாட்சியா் சிராஜ்பாபு, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்மணி, காட்டாங்கொளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், நகா்மன்றத் தலைவா்கள் மறைமலைநகா் ஜெ.சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி காா்த்திக் தண்டபாணி, ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவா் வி.ஜி.திருமலை, திருக்கழுக்குன்றம் பேரூராட்சித் தலைவா் திரு.யுவராஜ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுஅலுவலா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.