செய்திகள் :

உழைப்பு, விசுவாசத்துக்கு அதிமுகவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது: ரகுபதி பதில்!

post image

அதிமுகவில் அப்போது என்னுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார் மாநில இயற்கை வளத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் அளித்த பேட்டி:

அதிமுகதான் ரகுபதிக்கு அமைச்சர் பதவி வழங்கியது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுகவில் நான் இருந்தபோது எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாகத்தான் இருந்தேன். ஜெயலலிதாவை பொதுச்செயலராக ஆக்கியது நாங்கள்தான். இரவு, பகல் பாராது உழைத்திருக்கிறோம். 

அந்த உழைப்புக்காகத்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நாங்கள் உறங்கவில்லை. அன்றைக்கும் விழித்திருக்கிறோம். இன்றைக்கும் விழித்திருக்கிறோம். ஆனால், எடப்பாடிபழனிசாமிதான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

மணல் எடுப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்படுவோம். எம். சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலைகள் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாகக் குறைக்கச் செய்திருக்கிறோம்.

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி வாக்குமூலம் வழங்கலாம். அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் நிச்சயம் வழங்குவோம். உண்மையைச் சொல்ல வருகிறவர்களை இந்த அரசு பாதுகாக்கும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள், இந்தியாவில் இருப்பவர்கள் யாரும் பாகிஸ்தானை ஆதரிக்கவே மாட்டார்கள். அப்படி ஆதரிப்பவர்கள் இந்தியர்கள் அல்லர்.

தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் கைகளில் பணப்புழக்கத்தை  ஏற்படுத்தியிருக்கிறோம். வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இல்லை.

திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் பாகம் குறித்து முதல்வர் அறிவித்திருக்கிறார். கடந்த 2021 தேர்தலில் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். கட்டம் சரியில்லை என்று சொன்னவர்களின் கட்டம்தான் சரியில்லாமல் போனது. 

இரண்டாம் பாகம் எல்லாம் தோல்வியில் போனதாகவும் சொல்கிறார்கள். திராவிட மாடலுக்கு இரண்டாம் பாகம் உண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே மீண்டும் தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அந்த இரண்டாம் பாகம் இருக்கும் என்றார் ரகுபதி.

இதையும் படிக்க: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க! அண்ணன் மகளுக்கு அரியாசனத்தில் இடம்! - உதகையில் ருசிகரம்

உதகை மலர்க் கண்காட்சியில் மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 'உதயசூரியனுக்கு ஒட்டுப் போடுங்க' என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 ஆவது மலர்க் க... மேலும் பார்க்க

உதகை மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்தார் முதல்வர்!

உதகையில் 127 ஆவது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) தொடங்கிவைத்தார். கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி ... மேலும் பார்க்க

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க