Warren Buffett: தொடரும் நன்கொடை... இந்த முறை 1.2 பில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்த ...
உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவர்கள்,1 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பலி
கன்னோஜ்: லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என 5 பேர் பலியாகினர்.
பலியானவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த் கூறுகையில்,
மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்று லக்னௌவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் பங்கேற்றுவிட்டு சைஃபாய்க்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்தகொண்டிருந்து மருந்துவர்கள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது விபத்துக்குள்ளானது.
இதில், 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்து வந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க |உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்பு பணியில் ரோபோக்கள்
மேலும் பலத்த காயமடைந்த முதுகலை மருத்துவ மாணவரை திருவாவில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறினார்.
பலியான மருத்துவர்கள் விவரம்:
ஆக்ராவை சேர்ந்த அனிருத் வர்மா(29), பதோஹியை சேர்ந்த சந்தோஷ் குமார் மவுரியா(46), கண்ணாவை சேர்ந்த அருண்குமார்(34),பரேலியைச் சேர்ந்த நர்தேவ்(35) மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ராகேஷ் குமார்(38).
காயமடைந்தவர் மொராதாபாத்தைச் சேர்ந்த முதுகலை மருத்துவ மாணவர் ஜெய்வீர் சிங்(39) திருவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்ட அலுவலர் பிரியங்கா பாஜ்பாய் கூறினார்.