செய்திகள் :

உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் இருக்கும் மகாராணி லட்சுமிபாய் மருத்துவ கல்லூரியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இத்தீவிபத்தால் மருத்துவமனை முழுக்க புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக வெளியில் நோயாளிகள் மீட்கப்பட்டனர். புதிதாக பிறந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தனர். அவர்களில் 37 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தம் இரண்டு குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு இருக்கிறது. அதில் ஒன்றில்தான் தீப்பிடித்துக்கொண்டது. தீவிபத்து ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளும், உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு முண்டியடித்து வெளியில் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்படுவது போன்ற ஒருநிலை ஏற்பட்டது.

தீவிபத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. மேலும் 16 குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின என்று மருத்துவமனையின் அதிகாரி அவினாஷ் தெரிவித்தார். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க கமிட்டி அமைத்திருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் 54 குழந்தைகள் இருந்தது. அதில் 44 குழந்தைகள் மீட்கப்பட்டுவிட்டனர் என்றும் தெரிவித்தார். 6 தீயணைப்பு வண்டிகள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தன. தீவிபத்து குறித்து 12 மணி நேரத்தில் தனக்கு அறிக்கை தருமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு துணை முதல்வர் பிரிஜேஷை சம்பவ இடத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பி இருக்கிறார். கான்பூர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணர் குழு ஜான்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கவேண்டும் என்று தெரிவித்தனர். மீட்பு பணியை மேற்கொள்ள தாமதம் செய்ததாக குழந்தைகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

தேனி: `தங்கச்சி வீட்டு விசேஷத்துக்கு வர்றேன்னு போனார்'- பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்; மக்கள் சோகம்!

தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - இன்பவள்ளி தம்பதியரின் மகன் முத்து (36). இவர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். தற்போது ராஜஸ்தான் மாநிலம் 12 RAPID SIG ரெஜிமென்ட்டில் சிப்... மேலும் பார்க்க

குஜராத்: புல்லட் ரயில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கான்கிரீட் பிளாக் சரிந்து விபத்து; மூவர் பலி!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. மகாராஷ... மேலும் பார்க்க

Uttarakhand Bus Accident: 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்த பேருந்து; அதிகரிக்கும் உயிரிழப்புகள்

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.45 இருக்கைகளைக் கொண்ட பேருந்து, மர்ச்சுலா பகுதியில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்க... மேலும் பார்க்க

Kerala: காசர்கோடு கோயில் விழாவில் பட்டாசு விபத்து; 154 பேர் காயம்; ஆபத்தான நிலையில் 8 பேர்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரத்தில் தேரு அஞ்சோடம்பலம் வீரேர்காவு கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று (அக்டோபர் 29) அதிகாலை 12.20 மணியளவில் களியாட்டம் விழா நடைபெற்றது. அப்போது வாண வேடிக்கை நிகழ... மேலும் பார்க்க

திருவாரூர்: பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இளைஞர் பலி; காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வடம் போக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக கழிவு நீர் தனியார் வண்டி மூலம் கழிவு நீர் பாதா... மேலும் பார்க்க

TVK : தவெக மாநில மாநாடு: காரில் சென்ற திருச்சி இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட இருவர் விபத்தில் பலி!

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி, நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்தார். இந்நிலையில், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை பக... மேலும் பார்க்க