செய்திகள் :

உ.பி.யில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீச்சு!

post image

உத்தரப் பிரதேசத்தில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசிக்கு காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தது.

இந்த ரயில் தனேதா நிலையத்தை அடைந்ததும், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அதன் மீது கற்களை வீசியுள்ளனர். இதில் பெட்டியின் பி-1 ஜன்னல் சேதமடைந்தது.

தில்லியில் போராட்டத்தைத் தொடங்கும் விவசாயிகள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து ராம்பூரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க பரேலி சந்திப்பு முதல் ஷாஜஹான்பூர் வரை ரயில் பாதையை ஒட்டியுள்ள கிராமங்களில் ரயில்வே காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.

நாட்டில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை: ஃபரூக் அப்துல்லா

இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார். ஜம்மு-காஷ்மீரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மா... மேலும் பார்க்க

இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.238 கோடி அபராதம் விதிப்பு

விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா ரூ.238 கோடி அபராதம் விதித்துள்ளது. இன்ஃபோசிஸ் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் யானை தாக்கியதில் 5 கால்நடைகள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் யானை தாக்கியதில் ஒரு கன்று உட்பட 5 கால்நடைகள் உயிரிழந்தன. சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சிரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை ஒன்று நுழைந்தது. பின்னர் அங்கிருந்த வீடு ... மேலும் பார்க்க

மத்திய நிதியமைச்சருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்திற்கு ஒதுக்க வ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மொபைல் டவருக்கு நக்சல்கள் தீவைப்பு

சத்தீஸ்கரில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மொபைல் டவருக்கு நக்சல்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின... மேலும் பார்க்க

சபர்மதி ரிப்போர்ட் படத்தை இன்று பார்க்கவிருக்கும் பிரதமர்!

நாடாளுமன்ற வளாகத்தில் சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை மாலை காண உள்ளார். இப்படத்தை காண்பதற்காக நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பால்யோகி ஆடிட்டோரியத்திற்கு அவர் செல்லவுள்ளதா... மேலும் பார்க்க